Friday, 26 December 2014

அகத்திக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கட்டு
மிளகாய் வத்தல் - 4
தேங்காய் துருவல் - ½ கப்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
உப்பு, சமையல் எண்ணெய் - தேவையான அளவு


அகத்திக்கீரை பொரியல்

செய்முறை:-

* கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெயை காய விட வேண்டும். பின்னர் அதில் கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.

* கீரை நன்றாக வதங்கிய பின்னர், மிளகாய் வத்தலை அதில் கிள்ளிப் போட வேண்டும்.

* வெங்காயம், மிளகாயை அரிந்து போட்டு, மேலும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து, தேங்காய் துருவலையும் போட்டு நன்றாக கிளற வேண்டும். மீண்டும் ஒரு முறை வதங்கிய பின்பு, சரியான பக்குவத்தில் வந்தவுடன் எடுத்து விடலாம்.

இப்போது அகத்திக் கீரை பொரியல் தயார் ஆகிவிடும்.

சுக்கு - மல்லி காபி


தேவையான பொருட்கள் :

சுக்கு காபி பொடிக்கு :

சுக்கு - 1/2 கப்
மல்லி - 1/4 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

சுக்கு காபிக்கு :

தண்ணீர் - 2 கப்
சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி - தேவையான அளவு



செய்முறை:

• முதலில் சுக்கு, மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

• பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து 7 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

• அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி.

• சளி, தொண்டை அடைப்பு போன்றவற்றிற்கு இந்த சுக்கு - மல்லி காபி மிகவும் இதமாக இருக்கும்.

தக்காளி-இஞ்சி கொத்சு

 தக்காளி-இஞ்சி கொத்சு

  • பெரிய தக்காளி - 4
  • இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
  • நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
  • மிளகாய்த் துள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தக்காளியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்). இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
2 நிமிடங்கள் கழித்து தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
10 நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான தக்காளி இஞ்சி கொத்சு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Monday, 8 December 2014

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் - Bakeless Pineapple cherry Cake

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், அனைவரும் புத்தாடை, கேக், பரிசுகள் என பரபரப்பாக இருக்கின்றனர். கிறிஸ்மஸ் தினத்திற்கு சிலர் அவர்களது வீட்டில் கேக் செய்தாலும், பலருக்கு பிரியாணி செய்வது போல் வீட்டிலேயே கேக் செய்ய தெரியாது.




கேக் செய்வதற்கு நிறைய பயிற்சி தேவைப்படும் நிலையில், பலர் கேக்கை கடைகளில் இருந்து வாங்குவதே சிறந்தது என கருதுகின்றனர். ஆனால், இந்த கிறிஸ்மஸிற்கு நீங்கள் உங்கள் வீட்டிலேயே மிக எளிமையாக கேக் செய்யலாம்.

உங்கள் குழந்தைகள்கூட மிக சுலபமாக செய்து அசத்தலாம்.

தேவையானவை

கண்டென்ஸ்ட் மில்க் - 1 கப்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
பைன்னாபிள் - 1 கப் (துருவியது)
வெண்ணிலா வெஃபர் -20
செர்ரி - 1/2 கப்
கிரீம் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது - சிறிதளவு 

செய்முறை

ஒரு பாத்திரத்தில், கண்டென்ஸ்ட் மில்க், பைன்னாபிள் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.

ஒரு அகலமான தட்டு போன்ற பாத்திரத்தில் முதலில் 5 வெண்ணிலா வெபர்களை வரிசையாக அடுக்கவும், அதன்மேல் தயாரித்த பைன்னாபிள் கலவையை தடவவும்.

பின்னர் மீண்டும் அதன்மேல் வெண்ணிலா வெஃபர்களை அடுக்கி கண்டென்ஸ்ட் மில்க், பைன்னாபிள் கலவையை பூசவும்.

இதே போல் தேவைகேற்ப அடுக்கியபின் அந்த கலவை மீது சிறிதளவு கிரீம் மற்றும் தேங்காய் துருவலை தூவி, செர்ரி வைத்து அலங்கரிக்கவும்.

இந்த பாத்திரத்தை அப்படியே பிரிட்ஜில் 8 மணி நேரத்திற்கு வைத்து பரிமாறினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.