Friday, 17 October 2014

முருங்கைக்காய் சூப் (murungaikkai soup)

தேவையானவை :
முருங்கைக்காய் - 4
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள்  - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :


1. முதலில் வெங்காயம் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2.குக்கரில் வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்க வேண்டும்.

3 முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியே வழித்தெடுக்க வேண்டும்.  வெங்காயத்தை தனியே எடுத்து அரைக்க வேண்டும்.

4.மல்லித்தூள், பச்சை மிளகாய், பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

5.வெண்ணெயை உருக்கி அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.


6.முருங்கைக்காய், வெங்காயம் கலந்த வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

7.கொதித்ததும் இறக்கி எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை, உப்பு லேசாக தூவி பரிமாற வேண்டும்.

சுறாப்புட்டு(Shark Cake)

தேவையானவை :

சுறா -அரை கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)
மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்
பூண்டு - ஒரு கைப்பிடி (உரித்தது)
பச்சை மிளகாய் -4
சோம்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது.
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:
1. சுறாவை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக விடவும். சுறா வெந்ததும் ஆற வைத்து தோல், முள் நீக்கி உதிரி உதிரியாக செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
2.நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
3. உதிர்த்த சுறாவை சேர்த்துக் கிளறி போதுமான அளவு உப்பு சேர்த்து. சுறா ரொட்டித் துண்டு மாதிரி வெந்து உதிரி உதிரியாக முட்டைபொறியல் போல் வந்ததும் இறக்கி விடவும். இப்போது சுறாப் புட்டு தயார்.

எலும்பு சூப்(Mutton Bone Soup)

தேவையானவை :

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 1/4
பச்சை மிளகாய் - 2

அரைக்க தேவையானவை : 

இஞ்சி - 10 கிராம்,
பூண்டு - 10 கிராம், 
மிளகு தூள் - 2 தேக்கரண்டி,
ரொட்டித்தூள் - சிறிதளவு, 
எலுமிச்சம்பழம் - பாதி,
சீரகதூள் - 2 தேக்கரண்டி,
தனியாதூள் - 2 தேக்கரண்டி,
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு,
நெய் - 50 கிராம், 
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,

செய்முறை :

1. தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

2. ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும். 

3. பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி  சேர்த்து சூப்பை இறக்கவும். பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்.

Thursday, 16 October 2014

கொழுக்கட்டை - இனிப்பு வகை

 
 
 
தேவையான பொருட்கள் :
 
1. அரிசி ஒரு ஆழாக்கு
2. வெல்லம் 1/4 கிலோ
3. முற்றிய தேங்காய் 1
4. ஏலக்காய் 10
 
செய்முறை :
 
1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
 
2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
 
3. மாவு வெண்மையாக இருக்கும் பொருட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை விட்டு கீழே இறக்கி வையுங்கள்.
 
4. அரைத்து வைத்த மாவில் ஒரு ஆழாக்கு மாவைச் சிறிது சிறிதாக உருளித் தண்ணீரில் தூவுங்கள், அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
 
5. தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு டேஸ்டாக இருக்க ஒரு சிட்டிகை உப்பைத் தண்ணீரில் போடலாம். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடிவைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார்.
 
6. ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவி 1/4 கிலோ வெல்லமும் சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.
 
7. வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும். இப்போது பூரணம் தயார்.
 
8. அரை மணி நேரம் கழித்து மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளுங்கள்.
 
9. பூரணத்தை அதில் ஒரு ஸ்பூன் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.
 
10. இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.

புடலங்காய் கூட்டு

மதியம் என்ன சமைப்பது என்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியெனில் அதனைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. 
 
புடலங்காய் கூட்டு
 
அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.
 
 சரி, இப்போது அந்த புடலங்காய் கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
 
புடலங்காய் கூட்டு தேவையான பொருட்கள்: 
புடலங்காய் - 2 கப் (நறுக்கியது) 
துவரம் பருப்பு - 1/4 
கப் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு 
அரைப்பதற்கு... தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 
 
தாளிப்பதற்கு... 
 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
 
 செய்முறை: 
 
முதலில் புடலங்காயை உப்பு கொண்டு நன்கு தேய்த்து, நீரில் கழுவி, பின் அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
 
 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறி மற்றும் தண்ணீர் சேர்த்து, காய்கறி நன்கு மென்மையாக வேகும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். 
 
காய்கறியானது நன்கு வெந்ததும், அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். 
 
அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
 பின் காய்கறியில் இருந்து பச்சை வாசனை போய்விட்டால், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். 
 
ஒருவேளை கூட்டு மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
இறுதியில் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கூட்டுடன் சேர்த்தால், புடலங்காய் கூட்டு ரெடி!!!

பாகற்காய் சட்னி

காலையில் தோசை அல்லது இட்லிக்கு தேங்காய் சட்னி செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக பாகற்காய் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து சாப்பிட்டால், பாகற்காயின் கசப்பே தெரியாது. சரி, இப்போது அந்த பாகற்காய் சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
 
 
 குறிப்பாக இந்த சட்னி சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.
 
 பாகற்காய் சட்னி தேவையான பொருட்கள்: 
 
 பாகற்காய் - 1 
துருவிய தேங்காய் - 2-3 
டேபிள் ஸ்பூன் மல்லி - 1 
டீஸ்பூன் சீரகம் - 1/2 
டீஸ்பூன் வரமிளகாய் - 5-6 
புளி - 1 
எலுமிச்சை அளவு வெல்லம் - 1 
எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு 
 
தாளிப்பதற்கு... 
 
எண்ணெய் - 2-3 
டேபிள் ஸ்பூன் கடுகு - 1/4 
டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 
டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1/4 
டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
 
செய்முறை: 
 
முதலில் பாகற்காயை துண்டுகளாக்கி அதில் உள்ள விதைகயை நீக்கிக் கொள் வேண்டும். 
 
பின்னர் அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 
 
அப்படி ஊற வைத்த பின் பாகற்காயானது நீரை வெளியேற்றியிருக்கும். அப்போது அதனை வெளியேற்றிவிட்டு, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்கு பிரட்டி விட வேண்டும். 
 
இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்திருக்கும். பின் புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 
 
பின்பு மிக்ஸியில் பாகற்காய், மல்லி, சீரகம், வரமிளகாய், உப்பு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
 
எப்போது சட்னியின் நிறமானது அடர் சிவப்பு நிறத்தில் மாறுகிறதோ, அப்போது சட்னியை இறக்கினால், பாகற்காய் சட்னி ரெடி!!!